கோவை இளைஞர்களே... பண்ணை அமைக்க மானியம் வேண்டுமா?

published 7 months ago

கோவை இளைஞர்களே... பண்ணை அமைக்க மானியம் வேண்டுமா?

கோவை: கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 2024-25-ஆம் ஆண்டில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறமையும் ஆர்வமும் உள்ள கிராமபுற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள் அலகு) நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவிட 50% மானியத்துடன் திட்டம் மாநில அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில் ஒரு பயனாளிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை நிறுவுவதற்கு 250 நாட்டுக்கோழிகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், நாட்டுக்கோழிகளை பராமரிக்கும் பொருட்டு தேவையான கோழி கொட்டகை, கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு) மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் (ரூ.1,56,875/-)மாநில அரசால் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் கிராம பகுதியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் 30% தாழ்த்தப்பட்ட/ பழங்குடியின பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஏற்கனவே 2022- 23 மற்றும் 2023-24ஆம் ஆண்டுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் (RAFTAAR/NADP) பயன்பெற்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.

விண்ணப்பிக்கும் பயனாளிகள் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா / அடங்கல் நகல், 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கிகடன் ஒப்புதல் விவரம்), 3-வருடத்திற்கு பண்ணையை பராமப்பதற்கான உறுதிமொழி, 2022-23 & 2023-24-ஆம் ஆண்டுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றை 06.07.2024க்குள்
அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்களிடம் முறையாக
சமர்ப்பிக்க வேண்டும்.

நாட்டுக்கோழிபண்ணை நிறுவிடும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 6 பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேற்படி நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவி
பயன்பெற விருப்பமுள்ள
தொழில்முனைவோர் மற்றும் விவசாய பெருமக்கள் தங்கள் அருகிலுள்ள கால்நடை
மருத்துவ நிலையங்களை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்
தலைவர் கிராந்திகுமார் பாடி  தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe