கவுண்டம்பாளையம் திரைப்படம் நாளை வெளியாகாது- நடிகர் ரஞ்சித் கோவையில் பரபரப்பு பேட்டி...

published 7 months ago

கவுண்டம்பாளையம் திரைப்படம் நாளை வெளியாகாது- நடிகர் ரஞ்சித் கோவையில் பரபரப்பு பேட்டி...

கோவை: நாளை திரைக்கு வர  இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடபடாது ஒத்திவைப்பதாகவும்
இது தொடர்பாக முதல்வரையும் ,செய்திதுறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன் என கவுண்டம்பாளையம் படத்தின் இயக்குனரும் நடிகருமான ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையரிடம் படத்தின் எதிர்ப்பு மற்றும் மிரட்டல் தொடர்பாக புகார் மனு அளித்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,நாளை திரைக்கு வர  இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடபடாது ஒத்திவைப்பதாகவும்
இது தொடர்பாக முதல்வரையும் ,செய்திதுறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன் எனத்தெரிவித்தார்.
இந்த படம் வெளியிட கூடாது என்பதில் பலர் முனைப்போடு இருப்பதாகவும்,தியேட்டர் உரிமையாளர்கள் சொல்லும் போது வருத்தமாக இருப்பதாகவும் 
நாடக காதலை பற்றியும் ,பெற்றோர்களின் வலியையும் படமாக  எடுத்துள்ளேன்.இதற்கு பல இடங்களிலிருந்து  எதிர்ப்பு வருவதகாவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும். என் வாயில் வந்த கருத்துக்கள் அனைத்தும் உண்மையே.நான் அரசியல் வாதி கிடையாது.இந்த படத்தின் வெற்றிதான் என்னை எதிர்பவர்களுக்கு நான் சொல்லும் பதில் எனவும் தெரிவித்த ரஞ்சித்,
செண்சர் சான்றிதழ் வாங்கியும் இந்த படத்தை என்னால் வெளியிட முடியவில்லை.ஆனால் 
யார் எதிர்க்கிறார்கள் என்று நான் சொல்லவிரும்பவில்லை. எனவும் தெரிவித்த அவர்,தமிழக அரசின் அனுமதி பெற்று இந்த படத்தை விரைவில் வெளியிடுவேன் எனவும்இனி நான் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவையும்  கடவுள் பார்த்துகொள்வார்.
நான் நேர்மையாகவும் ,உண்மையாகவும் படம் எடுத்துள்ளேன் ,நான் பொய் சொல்லவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த படத்தை திரையிட்டால் கலட்டா செய்வோம் என்று பலர் தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுவதாக குற்றம் சாட்டிய ரஞ்சித்,
திரையரங்கின் பாதுகாப்பு மிக முக்கியம் எனவும்
ஒரு நாடக காதலை பற்றியும் ,ஒரு நல்ல குடும்ப கதையை நான் எடுத்துள்ளேன் ஆனால் மிரட்டி என்னை போன்ற எளிய கலைஞனை வளரவிடாமல் தடுக்கிறார்கள்.
இந்த படம் நாளை வெளியிடப்படாது என்பதை வருத்தோடு தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe