Accenture ஐ.டி வேலைவாய்ப்பு... சென்னை, கோவையில் பணி!

published 7 months ago

Accenture ஐ.டி வேலைவாய்ப்பு... சென்னை, கோவையில் பணி!

Accenture ஐடி நிறுவனத்தில் புதிய பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.   

இந்தியாவில் பல்வேறு இடங்களில் இந்த நிறுவனம் செயல்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை என 2 இடங்களில் கிளைகள்  இயங்கி வருகிறது.

தற்போது Accenture நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.  System and Application Services Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பி.எஸ்சி, பி.சி.ஏ, பி.பி.ஏ, பி.ஏ, பி.காம், பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக், எம்.சி.ஏ, எம்.எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளை 2021, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த பணிக்கு 0-11 மாதம் பணி அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும்  நபர்கள்  சென்னை, கோவையில் நியமனம் செய்யப்படுவார்கள். மேலும் ஹைதராபாத், பெங்களூர், புனே, குர்கிராம், கொல்கத்தா, நாக்பூர், இந்தூர், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய உள்ளிட்ட இடங்களில் பணி நியமனம் செய்யப்படுவர்.

விருப்பம் உள்ள நபர்கள் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பம் செய்ய கடைசி தேதி பற்றி தெரிவிக்கப்படவில்லை. எனவே விரைந்து விண்ணப்பிப்பது நல்லது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்கை  க்ளிக் செய்யவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe