2 ரயில்கள் கோவை ரயில் நிலையம் வராது என்று அறிவிப்பு!

published 7 months ago

2 ரயில்கள் கோவை ரயில் நிலையம் வராது என்று அறிவிப்பு!

கோவை: தண்டவாள பராமரிப்புப் பணிகளால் 2 ரயில்கள் கோவை ரயில் நிலையம் வராமல் செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் கூறியிருப்பதாவது:

சேலம் கோட்டத்தில் நடைபெற்று வரும் தண்டவாள பராமரிப்புப் பணிகளைக் கருத்தில் கொண்டு, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.

1. ரயில் எண்.13352 ஆலப்புழா - தன்பாத் டெய்லி எக்ஸ்பிரஸ், 16, 18, 20, 23, 25, 27 & 30 ஆகிய தேதிகளில் கோவை ரயில் நிலையம் வராது. அதற்கு மாறாக இந்த ரயில் போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

2. ரயில் எண்.12678 எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர் பெங்களூரு டெய்லி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 16, 18, 20, 23, 25, 27 & 30 ஆகிய தேதிகளில் கோவை ரயில் நிலையத்திற்கு வராது. அதற்கு பதிலாக போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்திச் செல்லப்படும். 

இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe