தமிழக மக்களுக்கு பரிசாக மின்கட்டண உயர்வை திமுக அரசு கொடுத்துள்ளது- வானதி சீனிவாசன் பேட்டி...

published 7 months ago

தமிழக மக்களுக்கு பரிசாக மின்கட்டண உயர்வை திமுக அரசு கொடுத்துள்ளது- வானதி சீனிவாசன் பேட்டி...

கோவை: கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்  அப்போது பேசிய அவர், திமுகவினருக்கு 40 எம்.பிகளை கொடுத்த மக்களுக்கு, அவர்கள் பரிசாக மின் கட்டண உயர்வை கொடுத்திருக்கிறார்கள் என மின்கட்டண உயர்வை விமர்சித்தார்.

இந்த மின்கட்டண உயர்வால் சிறு ,குறு தொழில்நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள் எனவும் மக்களை பாதிக்கின்ற மின் கட்டண உயர்வை தமிழக அரசு மறு பரீசிலினை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசு தான் இந்தியாவிலே அதிகமாக கடன் வாங்கிய அரசு என குறிப்பிட்ட அவர்  பல மடங்கு வரி உயர்வும் இங்கு தான் உள்ளதாக  குற்றம் சாட்டினார். 
தமிழ்நாட்டில் தொடர் படுகொலைகள் என்பது இங்கு சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதை காட்டுவதாக கூறினார். அரசியல் கட்சியினருக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை எனவுன்  தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை எனவும் தெரிவித்தார். 

காவிரி விவாகரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினால் கர்நாடக அரசு கேட்காதா? என கேள்வி எழுப்பிய அவர் இந்தியா கூட்டணியில் அதிக எம்.பிகளை வைத்துள்ள  திமுக, காவிரி விவாகரத்தில் காங்கிரஸ் அரசுடன் பேச வேண்டியது தானே? என கேள்வி எழுப்பினார்.  மேலும் கூட்டணி தர்மம் என்பது மக்களின் உரிமை பாதுகாப்பதும் தான் எனவும் அவர் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe