கோவையில் போதைப்பொருள் விற்ற நடிகர்-நடிகைகள் கைது!

published 7 months ago

கோவையில் போதைப்பொருள் விற்ற நடிகர்-நடிகைகள் கைது!

கோவை: கோவையில் மாநகரில் தனியார் கல்லூரி அருகே கஞ்சா மற்றும் போதை  மாத்திரைகள் விற்ற  மூன்று துணை நடிகர் மற்றும் இரு நடிகைகள் உட்பட ஐந்து பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக தொடர்ச்சியாக சோதனைகள் மேற்கொண்டு கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை சுங்கம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் திடீர் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஐந்து பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த சந்தேகமடைந்த போலீசார் அவர்களின் உடமைகளை சோதனையிட்டனர். அதில் அவர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரிய வந்தது. 

இதனை அடுத்து போலீசார் அவர்களிடன் நடத்திய விசாரணையில், சினிமா துறையில் வேலை செய்யும் துணை நடிகர்களான கோவை புல்லுக்காடு பகுதியைசேர்ந்த  யாசிக் இலாகி(26), போளுவாம்பட்டியைச்சேர்ந்த மரியா(31), சென்னையைச் சேர்ந்த வரும் தற்போது தொண்டாமுத்தூர் அடுத்த தாழியூரில் வசித்து வருபவருமான சினேகா ஸ்ரீ என்பது தெரியவந்தது. மேலும் இவர்களது கூட்டாளிகளான ஆர்.எஸ்.புரம் பகுதியைச்சேர்ந்த கிருஷ்ணன்(24),சாரமேடு பகுதியைச்சேர்ந்த முஜிபூர் ரகுமான் (27) ஆகிய இருவர் ஐந்து பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடமிருந்து ஒரு கிலோ 410 கிராம் கஞ்சா மற்றும் 200 போதை மாத்திரைகள், 3 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

மேலும் கைது செய்யப்பட்ட ஐவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்கில் கள்ளாமேடு பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஆசிக்,ரிஸ்வான், வட மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் ஆகிய நால்வருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்த நிலையில் நால்வரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe