கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் புதிய பூங்கா...

published 6 months ago

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் புதிய பூங்கா...

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட  82 இலட்சம் மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள பூங்காவினை மாநகராட்சி ஆணையாளர்  திறந்து வைத்தார்.

 

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்-23 பி.எம்.ஆர்.லே. அவுட் பகுதியில் 82 இலட்சம் மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் (விஜயலட்சுமி ராமகிருஷ்ணன் அறக்கட்டளை) அமைக்கப்பட்ட பூங்காவினை  துணை மேயர் வெற்றிச்செல்வன்  முன்னிலையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில்  பி.எம்.ஆர் லே-அவுட் பகுதியில் விஜயலட்சுமி ராமகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் முழு பங்களிப்புடன்  சிறுவர் பூங்கா மற்றும் பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இப்பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சோலார் மின்விளக்குகள் குடிநீர் வசதி, ஓய்வு அறை, சொட்டுநீர் பாசன வசதி மற்றும் நடைபாதை உள்ளிட்டவை உள்ளன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe