ஆனைகட்டி பழங்குடியின மக்கள் கோவை ஆட்சியரிடம் மனு!

published 6 months ago

ஆனைகட்டி பழங்குடியின மக்கள் கோவை ஆட்சியரிடம் மனு!

கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி மலை பகுதியில் உள்ள தனியார் மதுப்பான கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கடையை அகற்றக் கோரி அப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளித்தனர். அங்கு மது அருந்தி தங்கள் சமூகத்தினர் பலர் உடல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி பலர் உயிரிழந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய தென்னிந்திய பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் முருகவேலு , கடந்த 2019ல், நாங்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு ஆனைகட்டியில் இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டதாகவும் அந்த சமயத்தில் மாவட்ட நிர்வாகத்தினர், 23 கிலோமீட்டருக்கு  அப்பால் தான் இந்த கடை நிறுவப்படும் என்று உறுதியளித்ததாக கூறினார். இந்நிலையில் தற்போது  ஆனைகட்டி பகுதியில் தனியார் கிளப் துவக்கப்பட்டுள்ளதாகவும். அங்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்களை அருந்தி, கடந்த மூன்று மாதங்களில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

பழங்குடியின மக்கள் வசிக்கின்றன பகுதிகளில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற மத்திய அரசின் வழிகாட்டுதலில் இருப்பதாக கூறிய அவர் எங்கள் பகுதியில் உள்ள தனியார் பாரை அகற்றித் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், எங்கள் சமூகத்தினரை மது பழக்கத்திற்கு அடிமையாக்கி அவர்களது நிலங்களை அபகரிக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர்  அரசு நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு அளித்து, பழங்குடி இன மக்களின் நிலங்களை வாங்குவோ விற்கவோ கூடாது என ஆணை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி எங்கள் பகுதியில் இயங்கி வரும் நியாயவிலைக் கடைகளில், பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை எனவும்  நியாயவிலைக் கடைகளில் தற்போது வழங்கப்படும் பொருட்களால் எங்கள் சமூகத்தினர் பலர் உடல் ரீதியான பாதிப்புக்கு ஆளாகின்றனர் என கூறினார். 

தொடர்ந்து நான்காண்டுகளாக இந்த பிரச்சனைகள் குறித்து மனு அளித்து வருவதாகவும் ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை என குற்றம் சாட்டிய அவர் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் சமூகத்தினை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe