கோவையில் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திய கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்…

published 6 months ago

கோவையில் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திய கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்…

கோவை: நாடாளுமன்றத்தில் இறுதிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்ட பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு தழுவிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் புதனன்று நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 17-வது நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். 44 தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தியதை திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர் நலன்களைப் பாதுகாத்திட தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஒன்றிய பட்ஜெட்டில் இடம் பெறச் செய்ய வேண்டும். 

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள், மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe