மேம்பால தூண்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்ற வேண்டும் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் மனு

published 2 years ago

மேம்பால தூண்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்ற வேண்டும் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் மனு

 

கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் பொது இடங்கள் மற்றும் மேம்பால சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வந்தன. வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டி கலாசாரத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனவே மேம்பால சுவர்கள் மற்றும் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டவோ, விளம்பரங்கள் செய்யவோ கூடாது என மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தடை விதித்தது. அதனையும் மீறி சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

ஒருவரை போலீசார் கைதும் செய்தனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் சமீரன், தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய கலெக்டர் சமீரன், சுவரொட்டி ஒட்ட தடை விதித்ததுடன், சுவரொட்டி ஒட்டியவர்கள் அவற்றை அகற்ற 10 நாட்கள் அவகாசம் விதித்து உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவுகளையும் மீறி கோவையில் மேம்பால சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக கோவை மாநகர் மாவட்ட

அ.தி.மு.க. செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான அம்மன் அர்ச்சுனன் குற்றம் சாட்டி யுள்ளார். இதுதொடர்பாக அவர் கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று மனு கொடுத்தார்.

அதில் மேம்பால தூண்களில் தடையை மீறி ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி மற்றும் பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் பொதுமக்கள் துணையோடு அ.தி.மு.க. சார்பில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என கூறப்பட்டு உள்ளது. அவருடன் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர். ஜெயராமனும் சென்றிருந்தார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe