மாநகராட்சிக்கு வரிகள் கட்டியும் பலனில்லை- போராட்டத்தில் இறங்கிய குனியமுத்தூர் பகுதி மக்கள்...

published 6 months ago

மாநகராட்சிக்கு வரிகள் கட்டியும் பலனில்லை- போராட்டத்தில் இறங்கிய குனியமுத்தூர் பகுதி மக்கள்...

கோவை: கோவை மாநகராட்சி, குனியமுத்தூர் 87 வது வார்டுற்குட்பட்ட குனியமுத்தூர், வசந்தம்நகர், பி.கே.ஜி நகர் உட்பட வஹாப் பெட்ரோல்பங் எதிரில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் இனைப்பு சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு முழுமையாக மூடாததால் பொதுமக்கள்  மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

மேலும் குடிநீர் வினியோகமும் சரிவர கிடைக்கவில்லை, வரக்கூடிய குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும் இது குறித்து இப்பகுதியை சேர்ந்த 87 வது வார்டு திமுக கவுன்சிலர் பாபுவிடம் பலமுறை தெரிவித்தும் பலன் இல்லை என்றும், கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும் எந்த பலனும்  இல்லாததால் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதாகவும்பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்துதராத கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

மேலும் சாலைகள் அனைத்தும் பழுதாகியுள்ளதால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பமுடியவில்லை வழுக்கி விழுந்து அடிபடுவதாகவும், மக்களிடம் வாக்கு பெற்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் என்று யாரும் இப்பகுதிக்கு வருவதில்லை,

மேலும் வீடுகளில் குப்பைகள் சேகரிப்பதற்க்கும் மாநகராட்சி ஊழியர்கள் வராததால் வீடுகளில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும், மழைக்காலங்களில் நோய்தொற்று ஏற்பட்டு பலரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe