Online Approval திட்டத்தை ரத்து செய்திட வேண்டும்- அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்...

published 6 months ago

Online Approval திட்டத்தை ரத்து செய்திட வேண்டும்- அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்...

கோவை: கோவை மாநகராட்சி
சாதாரண கூட்டம் இன்று நடைபெறுகின்றது. இதில் மாநகராட்சி  கவுன்சிலர்கள் கவுன்சிலர்கள் பலர்  கலந்து கொண்டுள்ளனர்.  

இந்நிலையில் ஒரே நாளில் 346 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானங்களை  யாரும் படிக்க வாய்ப்பில்லை எனவும் இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடத்து இருக்கின்றது என குற்றச்சாட்டிய அதிமுக கவுன்சிலர்கள் ரமேஷ், பிரபாகரன், சர்மிளா ஆகியோர் ஆன்லைன் அப்ரூவல் கொடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் மனு அளித்து முறையிட்டனர்.
பின்னர் தனது இருக்கைக்கு வந்த அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் ஒரே நேரத்தில் 333 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாகவும் தீர்மானத்தை படிக்க கூட நேரம் ஒதுக்குவதில்லை எனவும் கூறினார்.

இதனால் திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதே வேளையில் வாக்குவாதம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே 333 தீர்மானங்களும் எவ்வித விவாதங்களும் இன்றி நிறைவேற்றப்பட்டதாக துணை மேயர் வெற்றிச்செல்வன் அறிவித்தார்.

இதனால் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் குருக்கிட்டு தற்போதைக்கு அமைதியான முறையில் மன்ற கூட்டம் நடைபெற உதவ வேண்டும் எனவும் இது குறித்து பின்னர் விவாதிக்கலாம் எனவும் கேட்டுக் கொண்டதை அடுத்து அதிமுக கவுன்சிலர்கள் சமாதானம் அடைந்தனர்.

முன்னதாக கூட்டம் நடைபெறும் விக்டோரியா ஹாலின் முன்பு பதாகைகளுடன் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe