தெற்கு ரயில்வே வேலை: 2438 காலி பணியிடங்கள்... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

published 6 months ago

தெற்கு ரயில்வே வேலை: 2438 காலி பணியிடங்கள்... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தெற்கு ரயில்வேயில்  தொழில் பழகுநர்  காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 2438 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. சென்னை, கோவை, திருச்சி மண்டலங்களில் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.  

பிட்டர், எலக்ட்ரீசியன், வெல்டன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், கார்பெண்டர், டீசல் மெக்கானிக், டர்னர், மெசினிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பயிற்சி பணி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும். அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MLT பணியிடங்களுக்கு 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (கல்வி தகுதி விவரங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.) ஊக்கத்தொகை ரூ. 6000 - 7000 வரை வழங்கப்படும்.

இந்த பயிற்சி பணியிடங்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://sr.indianrailways.gov.in/ என்ற ஆன்லைனின் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மண்டலங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிப்பது முக்கியம். க்க  
விண்ணப்பிக்க கடைசி தேதி  12.08.2024 ஆகும்.

இது தொடர்பான மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு  https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் உள்ள அதிகார பூர்வ  அறிவிப்பை காணவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe