செந்தில்பாலாஜி சிறையில் இருப்பது அனைவருக்கும் வருத்தம் தான்- அமைச்சர் முத்துசாமி கோவையில் பேட்டி...

published 6 months ago

செந்தில்பாலாஜி சிறையில் இருப்பது அனைவருக்கும் வருத்தம் தான்- அமைச்சர் முத்துசாமி கோவையில் பேட்டி...

கோவை: வருகின்ற தேர்தலில் செந்தில் பாலாஜி இருந்தால் பலமாக தான் இருக்கும் என்றும் அவர் இப்போது சிறையில் இருப்பது எங்களுக்கு மட்டுமல்ல எல்லோரும் வருத்தம் தான் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய உணவகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் முத்துசாமி,எளிய மக்கள் காலதாமதமாகல் வீடு கட்டுவதற்க்காக உடனடி அப்ரூவல் கிடைப்பதற்காக திட்டத்தை முதல்வர் துவக்கியுள்ளார். இதில் சதுர அடிக்கு இரு மடங்கு கூடுதல்  கட்டணம் வசூலிப்பதாக அதிமுகவினர் கூறுவது தவறு என்றும் முன்பு போல அப்ரூவல் வாங்கும் நடைமுறை இருந்தால் மக்களுக்கு  எவ்வளவு அலைச்சல் ,எவ்வளவு செலவு ஆகியிருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். 

அதிக கட்டணம் இருந்தால் முதல்வர் ஆய்வு செய்வார்.ஆனால் அப்படி எதுமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.மேலும் வருகின்ற தேர்தலில் செந்தில் பாலாஜி இருந்தால் பலமாக தான் இருக்கும்.என்றும் அவர் இப்போது சிறையில் இருப்பது எங்களுக்கு மட்டுமல்ல எல்லோரும் வருத்தம் தான் என தெரிவித்தார்.

மேலும் மூத்த அமைச்சர் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்ற பிரேமலதாவின் கருத்து குறித்த கேள்விக்கு - இது எங்கள் கட்சி யாருக்கும் துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் தான் முடிவு செய்வோம் என அமைச்சர் முத்துசாமி பதிலளித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe