மத்திய பட்ஜெட்- கோவையில் முன்னாள் அமைச்சர்கள், எம்பி உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்...

published 6 months ago

மத்திய பட்ஜெட்- கோவையில் முன்னாள் அமைச்சர்கள், எம்பி உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்...

கோவை: மத்திய பட்ஜெட்டில் பிற மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட நிதிகள் மற்றும் அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டங்களை போல் தமிழ்நாட்டிற்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு பலரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். 

 

இந்நிலையில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்ததாக கூறி  பாஜக அரசை கண்டித்து, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், கோவை டாடாபாத் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலையில் எம்பி ராஜ்குமார் தலைமையில்   பாஜக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதில், முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி, உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe