தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7.5% இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு...

published 6 months ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7.5% இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு...

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 
பத்திரிக்கை குறிப்பு
இளமறிவியல் மாணவர் சேர்க்கை 2024 -2025
பொதுப்பிரிவு (Academic Stream)   மாணவர்களுக்கான  7.5% இடஒதுக்கீட்டிற்கான 
நேரடி கலந்தாய்வு குறித்தான அறிவிப்பு பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கு  பொதுப்பிரிவு (Academic Stream)  மாணவர்களுக்கான  7.5% இடஒதுக்கீட்டிலுள்ள காலியிடங்களுக்கு நேரடி கலந்தாய்வு (Offline Counseling) 30.07.2024   (செவ்வாய்கிழமை) அன்று   தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள அண்ணா  அரங்கத்தில் மொத்தம் 171  இடங்களுக்கு நடைபெற உள்ளது. 

நேரடி கலந்தாய்வில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ / மாணவியர்களுக்கு அவர்கள் பதிவு செய்த மின்னஞ்சல் (email) முகவரிக்கும் மற்றும் அலைபேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.   அம்மின்னஞ்சலில் கல்லூரி வாரியாக உள்ள காலியிடங்களுக்கான அட்டவணையும் இணைக்கப்பட்டுள்ளது.

நேரடி கலந்தாய்வில் பங்கேற்க  தேர்வு செய்யப்பட்ட மாணவ/ மாணவியர்களின் பட்டியல் மற்றும் கல்லூரி வாரியாக உள்ள காலியிடங்களுக்கான  அட்டவணையும் https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டு உள்ளது.  நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ள தவறியவர்களுக்கு மறு பரீசிலினை  செய்யப்படமாட்டாது.

மாணாக்கர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய  [email protected] என்ற மின்னஞ்சல் (email) மூலமாகவும்   9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்களிலும் வாரநாட்களில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை தொடர்புகொள்ளலாம் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe