ஐ.பி.எஸ் அதிகாரி போல் நடித்து மோசடியில் ஈடுப்பட்ட இரண்டு பெண்கள் கைது- மேலும் இரண்டு பேர் தலைமறைவு…

published 6 months ago

ஐ.பி.எஸ் அதிகாரி போல் நடித்து மோசடியில் ஈடுப்பட்ட இரண்டு பெண்கள் கைது- மேலும் இரண்டு பேர் தலைமறைவு…

கோவை: சென்னை மேற்கு அண்ணாசாலை பகுதியில் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் நடத்தி வந்தவர் இந்திராகாந்தி. உதவியாளராக பணியாற்றியவர் கவிப்பிரியா. 

இவர்கள் மத்திய அரசு பணியில் சேர்த்து விடுவதாக கூறி பலரிடம் பணம் வசூலித்து உள்ளனர்.
கோவையை சேர்ந்தவர்கள் உள்பட 18 பேர் மொத்தம் ரூ.2 கோடி வரை வேலைக்காக கொடுத்து உள்ளனர். வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திரும்ப கொடுக்காமல் இந்திராகாந்தி ஏமாற்றி வந்தார். 

இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை நகர மத்திய குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படையினர் சென்னை சென்று இந்திராகாந்தியையும், கவிப்பிரியாவையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த மோசடியில் இந்திரா காந்தியின் மகள் ரஞ்சனி மற்றும் சிவமலர் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். ரஞ்சனி இந்திரா காந்தியின் மகள் ஆவார். இவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று டெல்லியில் மத்திய அரசு பணியில் இருப்பதாகவும், இவர் தான் மத்திய அரசுக்கான பணியில் சேர்த்து விட உதவுகிறார் என்றும் வேலை கேட்டு பணம் கொடுத்தவர்களிடம் கூறி உள்ளனர். 

இதனை பலரும் நம்பி உள்ளனர். இவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
கைதான கவிப்பிரியா சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வருவதாக பலரிடமும் கூறி உள்ளார்.
இந்த மோசடி தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe