இறந்தும் கொடுத்தான் நரேன்!

published 6 months ago

இறந்தும் கொடுத்தான் நரேன்!

கோவை: கார் விபத்தில் படுகாயம் அடைந்து மூளை சாவு  அடைந்த மாணவரின்  உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட உள்ளது.

 

கோவை கணியூர் சுங்காசாவடி அருகே கடந்த 17ஆம் தேதி காரில் கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்த கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் விபத்திற்கு உள்ளாகினர். அந்த விபத்தில் காரில் பயணித்த கோவையில் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் விஷால் மற்றும் பூபேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் காரில் பயணித்த நரேன்(19), பிரணவ் மற்றும் ஒரு வாலிபர் படுகாயம் அடைந்த நிலையில் மூவரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
  நரேன் இறப்பு; இன்ஸ்டா பதிவு: https://www.instagram.com/reel/C9-HOyAylbK/?utm_source=ig_web_copy_link

அதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நரேன் கோமாவிற்கு சென்ற நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் நரேன் மூளை சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவரது பெற்றோர் தீர்மானித்துள்ளனர். இதனை அடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe