கோவை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லுாரிகளில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி

published 2 years ago

கோவை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லுாரிகளில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி

கோவை: தமிழகத்தில் போதை பொருைள ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து
வருகிறது. போதை பொருள் விற்பனை செய்யும் குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்கவும், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து போலீசார்  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கோவையில் தொடர்  சோதனையில் ஈடுபட்டு கிலோ கணக்கில் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்து வருகினற்னர். இதே போன்று கடைகளில் ஆய்வு செய்து குட்கா உள்பட போதை பொருட்களை பிடித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பள்ளி, கல்லூரி அருகில் உள்ள பகுதிகளில், சட்ட விரோத போதை பொருள் விற்பனை அதிகரித்துள்ளதால், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நினைத்து பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இளம் தலைமுறையினர் போதை
பழக்கத்தில் சிக்காமல் இருக்கவும், சிக்கியவர்களை அந்த பழக்கங்களில் இருந்து மீட்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, தமிழகம் முழுதும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில்,
போதைபொருள் பயன்பாடு மற்றும் விற்பனை ஒழிப்பு உறுதிமொழி  எடுக்க பள்ளி கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மேலும் 19-ந் தேதி வரை போதைப்பொருள் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. உறுதிமொழி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கில், இன்று காலை நடைபெற போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பின்னர் என்.ஐ.பி குற்றப்புலனாய்வு அலகை, மதுவிலக்கு அமலாக்கத் துறையுடன் இணைத்து, அமலாக்கத் துறை உருவாக்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டு, நாட்டு நலப்பணி, தேசிய மாணவர் படையினர் பங்கேற்கும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.  மாணவர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை
ஏற்றுக்கொண்டார்.


கோவையில் நவஇந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் சமீரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோருடன் இணைந்து கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

இதேபோன்று அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள் முன்னிலையில் மாணவ-மாணவிகள்  போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe