அண்ணாமலைக்கு போன் ரீசார்ஜ் செய்யணுமா? சிங்கை ராமச்சந்திரன் கடும் தாக்கு!

published 6 months ago

அண்ணாமலைக்கு போன் ரீசார்ஜ் செய்யணுமா? சிங்கை ராமச்சந்திரன் கடும் தாக்கு!

கோவை: மோடிக்கு ஹாட் லைனில் அழைத்து மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று கூறிய அண்ணாமலைக்கு என்னாச்சு? அவரது போன் ரிசார்ஜ் பண்ணவில்லையா.? என்று கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

கோவை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில தலைவரும், கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளருமான சிங்கை இராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிட்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, கோவைக்கு செய்து கொடுப்பதாகச் சொல்லிய வாக்குறுதிகள் என்னாச்சு??

மோடியுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதாகவும், மக்களின் கோரிக்கைகளை அவரிடம் கூறுவதாகவும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அண்ணாமலை சொல்லியது என்னாச்சு? ஒரே போனில் பிரச்சினைகளுக்கு தீர்வு என்று சொல்லிய அண்ணாமலைக்கு என்ன ஆனது?

கோவை வளர்ச்சிக்கு எந்த விதமான திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. அண்ணாமலை கோவைக்குக் கொடுத்த வாக்குறுதிகளைப் படித்தால் நேரம் தான் வீண்.

கோவைக்கு எந்த திட்டமும் ஏன் அறிவிக்கவில்லை. தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்கள் இவர்கள் தான்.

சென்னை மெட்ரோ பற்றிப் பேசும் அண்ணாமலை கோவை மெட்ரோவிற்கு என்ன செய்தார்? பா.ஜ.க 21 தொகுதியில் டெபாசிட் வாங்கவில்லை. கோவைக்கும், அண்ணாமலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இங்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.

அ.தி.மு.க.வை பற்றிப் பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் கிடையாது. கோவை மக்களுக்கு இவர்கள் நல்லது செய்ய முடியாது. அ.தி.மு.க தான் கோவைக்கு வளர்ச்சி திட்டங்கள் செய்யும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe