பிரதமர் மோடிக்கு பத்தாயிரம் கடிதங்களை அனுப்பிய மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்- காரணம் தெரியுமா..?

published 6 months ago

பிரதமர் மோடிக்கு பத்தாயிரம் கடிதங்களை அனுப்பிய மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்- காரணம் தெரியுமா..?

கோவை: அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு 3000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு 10 ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டத்தை மறுமலர்ச்சி மக்கள் இயத்தினர் முன்னெடுத்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையத்திலிருந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி 10 ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மறுமலர்ச்சி
மக்கள் இயக்கம் தலைவர் ஈஸ்வரன்,செயலாளர்  செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் என நாற்பதுக்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டு அனைத்து கல்லூரிகளுக்கும் சென்று அனைத்து மாணவர்களிடத்திலும்  கையெழுத்து பெற்றும்,பேருந்து நிறுத்தத்திலும்,பேருந்தில் பயணிகளிடமும்,பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே இருக்கும் தபால் நிலையத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 10 ஆயிரம் தபால் அட்டைகளை அனுப்பி வைத்தனர்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு 3000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் எனவும் இந்தியாவில் 24,821 பேர் வழக்கமாக சமஸ்கிருத மொழி பேசும் மக்களுக்கு 2869 கோடி ரூபாயை மத்திய அரசு சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு மட்டும் ஒதுக்கி உள்ளது.

சமஸ்கிருதத்தை விட மூத்த மொழியான தமிழ் மொழிக்கு அதிக நிதி ஒதுக்கி உலகமெங்கும் தமிழை எடுத்துச் செல்வது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் அதனால் வருகின்ற நாடாளுமன்ற கூட்டு தொடரில் அதற்கான அறிவிப்பினை இந்திய பிரதமர் வெளியிட வேண்டும் என்று ஈஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

தமிழ்,சிந்தி,ஹிந்தி,உருது,இதர மொழிகளுக்கு பேசும் மக்கள் இந்தியாவில் 135 கோடி பேர் உள்ளனர்.ஆனால் அவர்களுக்கு வெறும் 1834 கோடி ரூபாய் ஒதுக்கியது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe