கோவை வழியாக பெங்களூர் செல்லும் வந்தே பாரத் ரயிலில் கூடுதல் நிறுத்தம்!

published 6 months ago

கோவை வழியாக பெங்களூர் செல்லும் வந்தே பாரத் ரயிலில் கூடுதல் நிறுத்தம்!

கோவை: எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக பெங்களூர் செல்லும் வந்தே பாரத் கூடுதலாக ஒரு நிறுத்தத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் கூறியிருப்பதாவது:

எர்ணாகுளம் - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே வாராந்திர வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்த ரயில்கள் திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

தற்போது, ​​பயணிகளின் வசதிக்காக, கிருஷ்ணராஜபுரத்தில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது

·         ரயில் எண்.06001 எர்ணாகுளம் - பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் சிறப்பு ரயில் கிருஷ்ணராஜபுரத்தில் - இரவு 9.05க்கு வந்து 9.07 மணிக்கு புறப்படும்.

·         ரயில் எண்.06002 பெங்களூரு கண்டோன்மென்ட் - எர்ணாகுளம் வந்தே பாரத் சிறப்பு ரயில் கிருஷ்ணராஜபுரத்தில் - காலை 5.40க்கு வந்து, 5.42 மணிக்கு புறப்படும்.

என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe