ஆன்லைன் கடன் 'ஆப்' உங்களுக்கு வைக்கும் ஆப்பு...! சிக்கியவர்கள் என்ன செய்யலாம்?

published 6 months ago

ஆன்லைன் கடன் 'ஆப்' உங்களுக்கு வைக்கும் ஆப்பு...! சிக்கியவர்கள் என்ன செய்யலாம்?

கோவை: அவசர நிலையில், மொபைல் ஆப் மூலம் கடன் பெற்ற பொதுமக்கள் பல்வேறு மிரட்டல்களுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

எங்கும் டிஜிட்டல் மையம் என்ற காலகட்டத்தில், இருந்த இடத்திலிருந்தே சுலபமாக கடன் பெறவும் வழி வந்துவிட்டது. பல்வேறு பைனான்ஸ் நிறுவனங்களும் தற்போது மொபைல் ஆப்-களை உருவாக்கி, அதன் மூலம் கடன் வழங்கி வருகின்றன.

"இருந்த இடத்திலிருந்தே, 2 நிமிடத்தில் கடன் வாங்கிக்கோங்க" என்ற கவர்ச்சிகர விளம்பரங்களை நம்பி நம்பகத்தன்மை இல்லாத நிறுவனங்களின் மொபைல் ஆப்-ஐ போனில் பதிவிறக்கம் செய்யும் போது, அந்த செயலி மூலம் உங்கள் மொபைலில் உள்ள Gallery, Contact உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் திருடப்படுகின்றன.

இதனைத்தொடர்ந்து, குறிப்பிட்ட கடன் தொகையை வழங்கிவிட்டு, அதனை விட பல மடங்கு அதிக தொகையைத் திரும்பச் செலுத்தக் கூறுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது தொடங்குகிறது கயவர்களின் ஆட்டம்.

மிரட்டல்

மொபைலில் இருந்து திருடிய தரவுகளை வைத்து, "உங்கள் புகைப்படங்களை நிர்வாணமாக மார்பிங் செய்து, அதனை உங்கள் செல்போன் தொடர்பு எண்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்புவோம்" என மிரட்டத் தொடங்குகின்றனர்.

கோவையில் இவ்வகை குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மக்கள் கவுரவத்திற்கு பயந்து சொல்லும் தொகையைச் செலுத்திவிட்டு, உள்ளக்குமுறலுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து தொடர்ச்சியாக சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையிலும், பொதுமக்கள் இந்த மோசடி ஆப்கள் விரிக்கும் வலையில் சிக்கித் தவிக்கின்றனர்.

எனவே, முன்னறிமுகம் இல்லாத எந்த ஒரு தனியார் ஆப்களையும் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்யாதீர்கள். நீங்கள் பதிவிறக்கம் செய்த அடுத்த நொடியே உங்கள் தரவுகள் திருடப்படுகிறது.

அடுத்து பல்வேறு விதமான மிரட்டல்களுக்கு நீங்கள் உள்ளாக்கப்படுவீர்கள். இந்த பிரச்னையில் சிக்கியுள்ளவர்கள், உடனடியாக மிரட்டல் விடுக்கும் நபருடன் தொடர்பு கொள்வதை நிறுத்த வேண்டும்.

ஏனென்றால், மிரட்டல் விடுக்கும் நபர் முதலில் ஒரு தொகையை செலுத்தச் செல்கிறான். அந்த தொகையை நீங்கள் செலுத்தினால் பிரச்சினை ஒழிந்தது என்று நினைத்தால் அங்கு தான் ட்விஸ்ட்.

உங்கள் செலவிடும் திறனை யூகித்து அடுத்து மீண்டும் ஒரு தொகையை கட்டச்சொல்லி அதே பாணியில் உங்களுக்கு மிரட்டல் வரும்.

என்ன செய்யலாம்?

சமூக அந்தஸ்துக்கு பயந்து லட்சக்கணக்கில் பணம் இழந்த கதைகளை நம் கோவை கண்டிருக்கிறது. எனவே முதல் மிரட்டல்  வரும்போதே, உங்கள் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கலாம். அல்லது, https://cybercrime.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக புகாரை பதிவு செய்யுங்கள்.

இணையத்தில் நீங்கள் இது போன்று சந்தித்த மோசடிகள் என்ன? விவரங்களை NewsClouds வாட்ஸ்-ஆப் எண்ணிற்கு பகிரவும்: 9944438011

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe