இந்திய ரயில்வேயில் வேலை : 7951 பணியிடங்கள்... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

published 6 months ago

இந்திய ரயில்வேயில் வேலை :  7951 பணியிடங்கள்... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ரயில்வே துறையில்  இளநிலை பொறியாளர் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியாகி உள்ளது. மொத்தம் 7951 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில்  தெற்கு ரயில்வேயில் 652 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

Junior Engineer, Depot Material Superintendent, Chemical & Metallurgical Assistant, Chemical Supervisor / Research 
Metallurgical Supervisor / Research ஆகிய பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ/டிகிரி/இன்ஜினியரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். (கல்வி தகுதி விவரங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.) தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 35,400 – 44,900  சம்பளம் வழங்கப்படும்.

இப்பணியிடங்களுக்கு 2 நிலைகளில் தேர்வு நடத்தப்படும். கணினி வழித் தேர்வில் தகுதி பெற்றவர்கள் 2ம் நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இதில்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில்  விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி  29.08.2024 ஆகும். இந்த பணியிட அறிவிப்பு தொடர்பாக மேலும் தகவல்  அறிந்து கொள்ள லிங்கை க்ளிக் செய்யவும். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe