கவுனில் அசத்தும் அதிதி ராவ்... இன்ஸ்டாகிராம் போட்டோஸ் இங்கே!

published 6 months ago

கவுனில் அசத்தும் அதிதி ராவ்... இன்ஸ்டாகிராம் போட்டோஸ் இங்கே!

நடிகை அதிதி ராவ் தனது லேட்டஸ்ட் போட்டோ சுட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில்   பதிவிட்டுள்ளார். தமிழ், இந்தி மொழி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

காற்று வெளியிடை, சைக்கோ,  ஹே சினாமிகா, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட தமிழ்  படங்களில் அதிதி ராவ் நடித்துள்ளார். மலையாளம், ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.  

இந்தியில் சமீபத்தில்  இவர் நடித்த ஜுப்ளி, தாஜ் பிளட் டை பிளட் திரைப்படங்கள் வரவேற்பை பெற்றன.  இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் ஹுரமாண்டி வெப் தொடரில் நடித்துள்ளார். பாலிவுட் திரைப்படங்களில்  தற்போது பிஸியாக  நடித்து வருகிறார்.

இவருக்கு சித்தார்த்க்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளனர். இந்த ஜோடி வெளிநாடுகளில் சமீப காலமாக ஜாலியாக சுற்றி வருகின்றனர்.

அதிதி ராவ் அடிக்கடி போட்டோ ஷூட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதனை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்கிறார். அந்த வகையில் தற்போது தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.  


பூ போட்ட குட்டி கவுனில் போஸ் கொடுத்தப்படி உள்ளார். இன்னொரு புகைப்பட தொகுப்பில் பச்சை நிற சல்வாரில் ஹோம்லி லுக்கில் இருக்கும் படங்களை பகிர்ந்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe