கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு...

published 6 months ago

கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு...

கோவை: கோவை, மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை Spot Admission 01. 07.2024 முதல் 31.07.2024 வரை மேற்கொள்ளப்பட்டது தற்போது நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 16.08 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்தான செய்தி குறிப்பில் தற்போது 16.08.2024 வரை நடைபெறவுள்ள நேரடி சேர்க்கைக்கு (SPOT ADMISSION) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் 8-ஆம் வகுப்பு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம். நேரில் வருகை புரிவோருக்கு இந்நிலைய உதவி மையம் மூலம் விண்ணப்பித்திட வசதி செய்யப்பட்டுள்ளது. 
பயிற்சியில் சேர விரும்பும் மகளிருக்கு உச்ச வயது வரம்பு எதும் இல்லை மற்றும் சிறப்பு கட்டணம் எதும் வசூலிக்கப்படுவதில்லை.

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு பயிற்சியில் Computer Operatior & Programming Assistant (COPA) Desktop Publishing Operator (DTPO) IoT Technician (Smart Health Care) Sewing Technology தொழிற்பிரிவுகளும், ஈராண்டு பயிற்சியில் Instrument Mechanic (IM) Electronics Mechanic (EM) Information Technology (IT) Technician Medical Electronics (TME) தொழிற்பிரிவுகளும் ஆறு மாத பயிற்சியில் Smart Phone Technician Cum App Tester தொழிற்பிரிவும் பயிற்றுவிக்கப்படுகிறது. பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் மத்திய அரசின் தேசிய தொழிற்சான்றிதழ் (NCVT) வழங்கப்படும்.

அனைத்து பயிற்சியாளர்களுக்கும் மாதம் தலா ரூ.750/- உதவித்தொகை, புதுமை பெண்திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்ற மகளிருக்கு மாதம் ரூ.1000/- மிதிவண்டி, சீருடை தையற்கூலி, காலணி, பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், 30 கிலோ மீட்டர் தொலைவு வரை இலவச பஸ் பாஸ் வழங்கப்படுவதுடன், நவீன தொழிற் வளர்ச்சியை அறிந்து கொள்ளும் பொருட்டு Industrial Visit Inplant Training Internship Training வழங்கப்படுறது.

மேலும் பயிற்சி முடிக்கும் தருவாயில் வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

கூடுதல் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்
98651 28182, 94900 55602, 8838158132, 94422 39112 என தெரிவிக்கப்பட்டுள்ளது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe