ஆடிப்பெருக்கு திருவிழா- நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என கோவை ஆட்சியர் அறிவுறுத்தல்...

published 6 months ago

ஆடிப்பெருக்கு திருவிழா- நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என கோவை ஆட்சியர் அறிவுறுத்தல்...

கோவை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு பவானி, ஆழியாறு, நொய்யல் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. வால்பாறை, நீலகிரி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது கனமழையும் பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மழையின் காரணத்தினால் நொய்யல், பவானி உள்ளிட்ட ஆறுகளில் நீரோட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவ்வாறான இடங்களுக்கு செல்ல வேண்டாம் என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நாளை ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு பல்வேறு பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு செல்வது வழக்கம். ஆனால் தற்பொழுது பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் கோவை மாவட்டத்தில் செல்லும் பவானி, நொய்யல், ஆழியாறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தியுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe