Cognizant ஐடி நிறுவனத்தில் வேலை : டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

published 6 months ago

Cognizant ஐடி நிறுவனத்தில் வேலை :  டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

பிரபல Congnizant ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியா முழுவதும் உள்ள அலுவலகங்களில் பணியாற்றலாம்.

தற்போது Congnizant நிறுவனத்தில் ITPT off Campus நடைபெற உள்ளது. இந்த ஆட்சேர்ப்பு 3 ஆண்டு டிகிரி  முடித்தவர்களுக்கானது.  அதன்படி, விண்ணப்பம் செய்வோர் ஏதேனும் ஒரு பிரிவில் 2024ம் ஆண்டில் டிகிரி முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் வைத்திருக்க கூடாது.  

ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிய வேண்டும்.  இந்தியாவில் எந்த இடத்தில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்தாலும் பணி செய்ய தயாராக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.  ஷிப்ட் அடிப்படையில் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 7 ம் தேதிக்குள்  Cognizant இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பம் செய்யும்போது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் கூடிய பயோடேட்டா அப்டேட் செய்ய வேண்டும். விண்ணப்பிப்பவர்களிடம் PAN Card இருக்க வேண்டும்.

நேர்க்காணலின்போது கல்லூரியின் அடையாளர அட்டை, பள்ளி, கல்லூரி படிப்புகளில் மார்க் ஷீட் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த பணிக்கான  அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்கை க்ளிக் செய்யவும். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe