கோவையில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக சித்தாபுதூர் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு தயார்- விண்ணப்பிக்க என்னென்ன வேண்டும்..?

published 6 months ago

கோவையில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக சித்தாபுதூர் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு தயார்- விண்ணப்பிக்க என்னென்ன வேண்டும்..?

கோவை: பொருளாதரத்தில் நலிவுற்ற வீடில்லாத ஏழை எளிய மக்களுக்காக கோயம்புத்தூர் நகர பேருந்து நிலையம் அருகில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சித்தாபுதூர் பகுதி -II திட்டப்பகுதியில்  அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்ய தயாரான நிலையில் உள்ளது.

தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் மொத்தம் 112 வீடுகள் ரூ14. 72 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு குடியிருப்பின் விலை ரூ.13.14 இலட்சமாகும். பயனாளி பங்களிப்பு தொகை ரூ.4.63.840/- ( ரூபாய் நான்கு இலட்சத்து அறுபத்தி மூன்றாயிரத்து எந்நூற்று நாற்பது மட்டும்) ஒவ்வொரு குடியிருப்பும் 400 சதுர அடி பரப்பளவு கொண்டது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வரவேற்பறை ஒரு படுக்கை அறை, ஒரு சமையல் அறை. ஒரு குளியல் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், குடியிருப்பு வேண்டி விண்ணப்பம் செய்வதற்கு இந்தியாவின் வேறு எங்கும் சொந்தமாக வீடோ நிலமோ இருக்க கூடாது. ஆண்டு வருமானம் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் அரசின் சார்பாக விடோ நிலமோ பெற்றிருத்தல் கூடாது ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு குடியிருப்புக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கு கணவன், மனைவி மற்றும் ரேசன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களது ஆதார் கார்டு நகல், ரேசன் கார்டு நகல் பாஸ்போர்ட் போட்டோ-2 வருமான சான்றிதழ் நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு நகல் போன்ற ஆவணங்களுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோயம்புத்தூர் கோட்ட அலுவலகத்தில் 12.08.2024 தேதியிலிருந்து நேரில் வந்து விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe