தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் பராஷர் அக்ரோடெக் பயோ பிரைவேட் லிமிடெட் புரிந்துணர்வு ஒப்பந்தம்...

published 6 months ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் பராஷர் அக்ரோடெக் பயோ பிரைவேட் லிமிடெட் புரிந்துணர்வு ஒப்பந்தம்...

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனரகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படும் தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள் ஆகியனவற்றை வணிகமயமாக்கி வருகின்றது.

"சேமித்த தானிய பூச்சிப்பொறி" வணிகமயமாக்கலுக்காக, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் வாரணாசியை சேர்ந்த பராஷர் அக்ரோடெக் பயோ பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பூச்சிப்பொறி என்பது உணவு தானியங்களில் உள்ள பூச்சியைக் கண்டறியும் சாதனம். இப்பொறியானது சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்களில் பூச்சிகளைக் கண்டறிந்து அவற்றைப் பிடிக்கும் சாதனமாகும். இந்த பூச்சிப்பொறியை கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பூச்சியியல் பேராசிரியர் முனைவர் எஸ்.மோகன் உருவாக்கியுள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் அதன் பதிவாளர் முனைவர். தமிழ்வேந்தனும், பராஷர் அக்ரோடெக் பயோ பிரைவேட் லிமிடெட் சார்பில் அதன் இயக்குநர் பூர்ணேந்திரசேகர் பாண்டேவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் சோமசுந்தரம், வேளாண் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ரவிராஜ், உணவுப் பதப்படுத்துதல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற பூச்சியியல் பேராசிரியர் முனைவர் மோகன், பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe