கோவையில் நடைபெற்ற செயற்கை அவையங்கள் வழங்கும் முகாம்- ஆயிரக்கணக்கானோர் பயனடைந்தனர்...

published 6 months ago

கோவையில் நடைபெற்ற செயற்கை அவையங்கள் வழங்கும் முகாம்- ஆயிரக்கணக்கானோர் பயனடைந்தனர்...

கோவை: இராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செயல்பட்டு வரும்   நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் அமைப்பு இந்தியா மட்டுமின்றி ஆப்ரிக்க நாடுகளிலும். மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் மற்றும் கைகளை இலவசமாக பொருத்தும் முகாம்களை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் கோவையில் கடந்த ஏப்ரல் மாதம் முகாம் நடத்தி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான   செயற்கை மூட்டு மற்றும்   காலிபர்களுக்கான  அளவீடுகள் எடுக்கப்பட்டன..

இதனை தொடர்ந்து அளவீடுகள்  எடுக்கப்பட்ட செயற்கை மூட்டுகளை பயனாளிகளுக்கு மருத்துவ குழுவினர் உதவியுடன்  பொருத்துவதற்கான முகாம் கோவை தடாகம் சாலை கே.என்.ஜி புதூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் கோவை,ஈரோடு,சேலம்,மதுரை,திருச்சி என பல்வேறு தமிழகத்தின் பல்வேறு  மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா,கேரளா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இதில் 20 க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர்களுக்காக  தனித்தனியே அரங்குகள் அமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை,கால்களை பொருத்தி செயல்படுவதற்கான பயிற்சிகளை அளித்தனர்..

சுயமாக நடக்க முடியாமல் உதவியாளர்களுடன் வந்த மாற்றுத்திறனாளிகள் இலவசமாக  செயற்கை மூட்டுக்களை பொருத்தி தானாக நடந்து சென்றதை கண்ட உறவினர்கள்   நெகிழ்ச்சியுடன் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்..

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe