தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் மரபணு தனிமைப்படுத்தல், குளோனிங் மற்றும் மூலக்கூறு பண்புகளின் இயல்பாய்வு நேரடி பயிற்சி...

published 6 months ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் மரபணு தனிமைப்படுத்தல், குளோனிங் மற்றும் மூலக்கூறு பண்புகளின் இயல்பாய்வு நேரடி பயிற்சி...

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையத்தின் தாவர உயிரி தொழில்நுட்பத் துறை 2024 ஆகஸ்ட் 6 முதல் 9 வரை நான்கு நாள் "மரபணு தனிமைப்படுத்தல், குளோனிங் மற்றும் மூலக்கூறு பண்புகளின் இயல்பாய்வு ஆகியவற்றில் நேரடி பயிற்சி" ஒன்றை ஏற்பாடு செய்தது.

இந்தியா, மலேசியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்து சுமார் 23 ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்த பயிற்சியில் பங்கேற்றனர்.

இயக்குநர் (CPMB&B) முனைவர் செந்தில், ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் ரவீந்திரன் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

முனைவர் என்.செந்தில், அனைத்து மூலக்கூறு உயிரியல் ஆய்வுகளுக்கும் ஜீன் குளோனிங் ஒரு முக்கிய நுட்பமாக இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பயிற்சித் திட்டம் பற்றிய மேலோட்டமான பார்வையையும் அவர் வழங்கினார். மரபணு குளோனிங்ன் அத்தியாவசிய திறன்களை மேம்படுத்துவதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

திறமையான மனிதவன மேம்பாட்டை வளர்ப்பதில் இந்த வகையான மரபணு
குளோனிங் பயிற்சியின் பங்கு குறித்து ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் ரவீந்திரன்
கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe