கோவையில் அம்பேத்கர் சிலை கோரிக்கை வலுக்கிறது!

published 6 months ago

கோவையில் அம்பேத்கர் சிலை கோரிக்கை வலுக்கிறது!

கோவை: கோவை மாநகரில் அம்பேத்கருக்கு சிலை நிறுவுவது தொடர்பாக பல ஆண்டுகளாக பல்வேறு முற்போக்கு அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இது குறித்து பலமுறை முதல்வரிடமும் பேசியுள்ளனர்.

 

இந்நிலையில் நாளைய தினம் அரசு நிகழ்ச்சிகளுக்காக கோவைக்கு வருகை புரியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்கள் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்தான ஆலோசனை கூட்டம் காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் உட்பட பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு இது குறித்து ஆலோசித்தனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதியமான், அம்பேத்கரை குறித்து தற்போதும் சாதிய மனநிலையே நிலவி வருவதாகவும் அதனை மாற்ற வேண்டும் என தெரிவித்தார். சிலையை நிறுவுவதற்கு ஏற்கனவே கோவை மாநகராட்சி தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பதை சுட்டிக்காட்டிய அவர் தற்பொழுது உள்ள அரசும் இதற்கு எதிராக இல்லை எனவும் முறையாக அணுகியிருந்தால் இந்நேரம் இது நடந்து இருக்கும் என்றார். தற்பொழுது உள்ள அரசு சிலை அமைப்பதற்கான முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் இது குறித்து விரைவில் முதலமைச்சரை சந்திக்க இருப்பதாகவும் நாளை கோவை வரும் முதலமைச்சரை சந்திக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe