கோவையில்  லாரி மோதி வாலிபர் சாவு  பைக்கில் தவறி விழுந்து மேலும் இரண்டு பேர் சாவு...

published 6 months ago

கோவையில்  லாரி மோதி வாலிபர் சாவு  பைக்கில் தவறி விழுந்து மேலும் இரண்டு பேர் சாவு...

கோவை: கோவை அருகே உள்ள ஈச்சனாரி முத்துநகர் பகுதி சேர்ந்தவர் தண்டபாணி. இவரதுமகன் பிரபாகரன் (வயது 29).
நேற்று பிரபாகரன் மோட்டார் சைக்கிளில் ஈச்சனாரி-செட்டிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது அதே வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது. 
இதில் தூக்கி வீசப்பட்ட பிரபாகரன் இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் அடைந்தார்.. அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கே சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்த. இது இதுகுறித்து அந்த வழியாக வந்த சீனிவாசன் என்பவர் போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் லாரி டிரைவர் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த முருகன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
 

இதேபோன்று மற்றொரு இவற்றில் கோவை அருகே உள்ள வெள்ளலூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த நூறு சாமி (வயது 74) என்பவர் மேட்டுப்பாளையம்- துடியலூர் ரோட்டில் சென்ற போது முன்னாள் சென்ற வாகனத்தின் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக இறந்தார். இது குறித்தும் கோவை போக்குவரத்து  பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.


புதுக்கோட்டை மாவட்டம் அமராவதி தொகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரது மகன் அருணா பாண்டியன் (வயது 27) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது சத்தி ரோட்டில் கணபதி மூர் மார்க்கெட் அருகில் திடீரென தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பரிதாபமாக இருந்தார். இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe