வயநாடே கலங்காதே... உங்களுக்காக இருக்கிறது கோயம்புத்தூரே...!

published 6 months ago

வயநாடே கலங்காதே... உங்களுக்காக இருக்கிறது கோயம்புத்தூரே...!

கோவை: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு கோவை மக்கள் ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பினர்.

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடு, உடமைகளை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரணப்பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

கோவையில் ஏற்கனவே நிலச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரணப்பொருட்கள் அனுப்பப்பட்டன. இதனிடையே ஆர்.எஸ்.புரம் பகுதி மக்கள் மீண்டும் நிவாரணப்பொருட்களை அனுப்பினர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 71-வது வார்டு பொதுமக்களின் சார்பாக ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலான உணவு, உடை, நோட்டு புத்தகங்கள், போர்வைகள் அடங்கிய நிவாரணப் பொருட்களை மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன் வயநாடு அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, உதவி ஆணையர் சந்தியா, மாமன்ற உறுப்பினர்கள் அழகு ஜெயபால், நவீன் குமார், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதி மக்கள் கலந்து கொண்டனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe