கோவையில் தொடங்கியது ராணுவ கண்காட்சி; பொதுமக்களுக்கு ஒரு நாள் மட்டும் அனுமதி! - முழு வீடியோ உள்ளே!

published 6 months ago

கோவையில் தொடங்கியது ராணுவ கண்காட்சி; பொதுமக்களுக்கு ஒரு நாள் மட்டும் அனுமதி! - முழு வீடியோ உள்ளே!

கோவை: கோவையில் உள்ள இந்திய விமானப் படைத்தளத்தில் ராணுவ தளவாடங்கள் கண்காட்சி இன்று தொடங்கியது.

கோவையில் உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் 'தரங் சக்தி-2024' எனும் பன்னாட்டு விமான பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 6ம் தேதி துவங்கிய விமான பயிற்சியில் இந்தியாவோடு ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகள் கலந்து கொண்டு விமான பயிற்சி ஒத்திகைகளை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் இந்தியாவின் தேஜஸ், ஜெர்மனியின் typhoon உள்ளிட்ட உயர்ரக போர் விமானங்கள் பங்கேற்ற பயிற்சி ஒத்திகை நடைபெற்றது.

இந்த நிலையில் ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமான கருவிகளின் கண்காட்சி இன்று சூலூர் விமானப்படைத்தளத்தில் துவங்கியுள்ளது.

இதில் 62 அரங்குகள் அமைக்கப்பட்டு HAL, BHEL உள்ளிட்ட பொதுத்துறை மற்றும் தனியார் ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

இன்றும் நாளையும் இக்கண்காட்சியினை ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் மற்றும் ராணுவப் படையினர் பார்வையிடுகின்றனர். விமான பயிற்சி நிறைவு நாளான ஆகஸ்ட் 15 அன்று பொதுமக்கள் இக்கண்காட்சி பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப்படை சாகச வீடியோக்களை காண : https://youtu.be/KFqL4s1RRnw

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe