கோவையில் காலாட்படை பட்டாலியனின் வாகனப் பேரணி...

published 6 months ago

கோவையில் காலாட்படை பட்டாலியனின் வாகனப் பேரணி...

கோவை: 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 110 காலால்படை பட்டாலியன் பிரதேச ராணுவத்தின் திரங்கா பைக் பேரணி நடைபெற்றது.

 

கோவை ரெட்ஃபீல்ட் பகுதியல் உள்ள 110 காலாட்படை பட்டாலியன் பிரதேச ராணுவத்தின் 75-வது ஆண்டுயொட்டியும் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கான திரங்கா பைக் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை 2 இன் சி கமாண்டர் விக்ரம் சிங் துவங்கி வைத்தார்.

பேரணியில் 80-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இருசக்கர வாகனங்களில் தேசிய கொடி ஏந்தி பேரணியாக 110 காலால் பட்டாலியன் பிரதேச ராணுவத்தின் வளாகத்தில் ரெட் பீல்ட்ஸ் சாலை, ரேஸ்கோர்ஸ்,வாலாங்குளம் ஆகிய பகுதிகளில் பேரணியாக சென்றனர்.

பேரணியில் இருசக்கர வாகனங்களுக்கு பின்பு ராணுவ வாகனத்தில் தேசியக் கொடிகள் ஏந்தி தேசப்பற்று பாடல்களை ஒலிபெருக்கி மூலம் ஒலிர வைத்தது காண்போரை கவர்ந்தது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe