கோவையில் உள்ள தொழில் முனைவோரே கடன் வேண்டுமா? கொடுக்கிறது தமிழக அரசு!

published 6 months ago

கோவையில் உள்ள தொழில் முனைவோரே கடன் வேண்டுமா? கொடுக்கிறது தமிழக அரசு!

கோவை: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

கோவை கிளை அலுவலகத்தில் (முகவரி: கோவை கிளை: எண் 5 கோடிசியா கட்டிடம். ஜி. டி. நாயுடு டவர்ஸ், ஹுசூர் சாலை, அண்ணா சிலை அருகில் கோவை - 641 018) குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா 19.08.2024 முதல் 06.09.2024 வரை நடைபெறுகிறது.

இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பல்வேறு சிறப்பு தொழில் திட்டங்கள், புதிய தொழில் முனைவோர். தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (148805) மற்றும் மத்திய மாநில அரசுகளின் மூலதன மானிய திட்டங்கள் போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்படுகிறது.

மேலும் தகுதி வாய்ந்த தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ.150 இலட்சம் வரை விரைந்து பெற்று தர ஆவண செய்யப்படுகிறது. மேலும் ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்கள் தங்கள்
உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு விரிவாக்கம் செய்ய நவீன இயந்திரங்கள் நிறுவும் பட்சத்தில் கூடுதலாக வட்டி மானியம் வழங்கப்படும்.

இந்த முகாமில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50% சலுகை முகாம் காலத்தில் அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி புதிய தொழில் முனைவோர் தொழிலதிபர்கள் தங்கள்
தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு
ஆட்சித்தலைவர் கிராந்திகுமார்
கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் விவரங்களை அறிய 87543 30535, 94440 29265 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தியை கோவையில் உள்ள தொழில் முனைவோர்க்கு பகிர்ந்து உதவிடுங்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe