கோவையில் ஆறரை இலட்சம் பணம் மற்றும் நவதானியங்களால் இடுக்கண் குடி மாரியம்மன் கோவிலில் அலங்காரம்…

published 6 months ago

கோவையில் ஆறரை இலட்சம் பணம் மற்றும் நவதானியங்களால் இடுக்கண் குடி மாரியம்மன் கோவிலில் அலங்காரம்…

கோவை: ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு  ஆறரை லட்சம் பணம், நவதானியங்களால் கோவையில் உள்ள இடுக்கண் குடி மாரியம்மன் கோவிலில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

 

ஆடி மாதம் வருகின்ற அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும்  அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில் ஆடி மாதம் கடைசி வெள்ளிகிழமையான இன்று கோவை தாமஸ் வீதியில் அமைந்துள்ள இடுக்கண் குடி மாரியம்மன் கோவிலில்  ஆறரை லட்சம் ரூபாயை  கொண்டு கோவில் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதே போல் அம்மன் வீற்றிருக்கும் வாகனமான அன்னபட்சி முழுவதும் நவதானியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் அலங்கரிக்கப்பட்டுள்ள அனைத்து பணங்களும் பக்தர்கள் அளித்த பணமாகும்.  நாளை இந்த பணங்கள் அனைத்தும் அந்தந்த பக்தர்களுக்கு பூஜை செய்து பிரசாதங்களுடன் அளிக்கப்படும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe