வெளியூர் வேலைக்கு செல்லும் கோவை வாசிகளே உஷார்! வீடியோ உள்ளே!

published 6 months ago

வெளியூர் வேலைக்கு செல்லும் கோவை வாசிகளே உஷார்! வீடியோ உள்ளே!

கோவை- பெங்களூர் - கோவை ஆம்னி பேருந்தில் பயணிகள் வைத்து இருந்து லேப்டாப் பேக்களை திருடிச் செல்லும் இளைஞரின் அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது…


கோவை - பெங்களூர் செல்ல நாள்தோறும் இரவு நேரங்களில் அரசு மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த சொகுசு பேருந்துகள் இயங்கி வருகிறது. இந்நிலையில்
கடந்த 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் இருந்து கோவைக்கு படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்து வந்து கொண்டு இருந்தது. 

அப்பொழுது தேனீர் மற்றும் இயற்கை உபாதிகளுக்காக வரும் வழியில் பேருந்துகள் நின்று செல்லும் இரவு நேர உணவகங்களின் ஒன்றில் நின்ற பேருந்தில் இளைஞர் ஒருவர் ஏறி அங்கு பயணிகளின் படுக்கை அறைகளை ஒவ்வொன்றாக தேடுகிறார். அதில் ஒரு பயணியின் படுக்கையில் வைத்து இருந்த லேப்டாப் பேக்குகளை எடுத்து மாட்டிக் கொண்டு அந்தப் பேருந்தில் இருந்து இறங்கி செல்லும் காட்சிகள் அந்த பேருந்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.  

அந்த காட்சிகள் தற்போது வெளியாகி இரவு நேர சொகுசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/jRE33gcj194

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe