கோவையில் நடைபெற்ற மரம் வளர்ப்பு குறித்தான தேசிய கருத்தரங்கம்...

published 6 months ago

கோவையில் நடைபெற்ற மரம் வளர்ப்பு குறித்தான தேசிய கருத்தரங்கம்...

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக்கழகம் சார்பில் 'மரம் வளர்ப்பு' குறித்தான தேசிய கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.

இதில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதான் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக் கழகத்தின் இயக்குனர், ஆராய்ச்சியாளர்கள், வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாநில வனத்துறை 
அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அரிய வகை மரங்கள் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. மேலும், மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஆவணப்படமும் மத்திய இணை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மரம் வளர்ப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் விவசாயிகளுக்கு மத்திய இணை அமைச்சர் பாராட்டு விருதுகளை வழங்கினார்.

இதனையடுத்து சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வரதான்சிங், இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக்கழகம் முக்கிய மர வகைகளான தேக்கு, சால், சந்தனம், இந்தியன் ரோஸ் வுட், வேம்பு, யூகலிப்டஸ் உள்ளிட்ட தாவர வகை வளர்ப்பை ஊக்குவிப்பதில் சிறந்த பணியாற்றி வருவதாகவும், மரம் வளர்ப்பில் அறிவியல் ரீதியான ஏராளமான ஆராய்ச்சிகள் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசியவர் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை தவிர்க்க அதிக அளவில் மரம் வளர்ப்பது அவசியம் எனவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மரம் வளர்ப்பதை சமூக கடமையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe