கோவையில் விவசாய இலவச மின் இணைப்பு குறித்தான ஆய்வுக்கூட்டம்...

published 5 months ago

கோவையில் விவசாய இலவச மின் இணைப்பு குறித்தான ஆய்வுக்கூட்டம்...

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாய இலவச மின் இணைப்புகள் கள ஆய்வு குறித்து வேளாண்மைத் துறை தோட்டக்கலைத் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் முதன்மை செயலாளர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர் பிரகாஷ்  தலைமையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய வேளாண் வணிகத் துறை ஆணையர் பிரகாஷ், தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியினை பெருக்கவும் விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் மற்றும் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றது. 1989ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர்  கலைஞர் அவர்களால் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. 

அந்தகாலங்களில் விவசாய நிலங்களின் பரப்பு அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது, குடியிருப்புகள், கல்விநிலையங்கள், தொழில் நிறுவனங்கள் அதிகமாகவிட்டதால் விவசாய நிலங்களின் பரப்பு மிக குறைந்துவிட்டன.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 96,171 இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு பயனடைந்து வருகின்றனர். 
இதில் ஒரு சிலர்
கடந்த காலங்களில் விவசாய பயன்பாட்டிற்காக இலவச மின் இணைப்பு பெற்றியிருப்பார்கள்.

ஆனால், தற்போது அந்த இடத்தில் விவசாயம் செய்யாமல் அந்த இணைப்பை கல்விநிறுவனங்கள் தொழில்நிறுவனங்கள் போன்ற வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துகிறார்களா என்பதை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்கள் மின்வாரிய துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து கண்டறியவேண்டும். மேலும், இதுதொடர்பான அறிக்கையினை 31.08.2024க்குள் அளிக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe