கோவையில் நாளை துவங்குகிறது மத்திய அரசு சார்பில் புகைப்பட கண்காட்சி- கோவைக்கு என்னென்ன திட்டங்கள் வந்துள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்...

published 5 months ago

கோவையில் நாளை துவங்குகிறது மத்திய அரசு சார்பில் புகைப்பட கண்காட்சி- கோவைக்கு என்னென்ன திட்டங்கள் வந்துள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்...

கோவை: இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில் கோவை மாநகரில் மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் புகைப்படக் கண்காட்சி, கோவை அவினாசி சாலை வஉசி பூங்கா அருகில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 31 வரை 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இதில் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த  புகைப்படம் கண்காட்சி,ஆதார் திருத்தம்,விழிப்புணர்வு திரைப்படங்கள்,கருத்தரங்கு, பல்துறை சார்ந்த அரங்குகள், கலை நிகழ்ச்சிகள்,போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நடைபெறுகிறது.

இது குறித்து சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியபோது:-

'கோவையில் நாளை முதல் ஐந்து நாட்களுக்கு மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மத்திய மக்கள் தொடர்பகத்த்தின் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கோவை மாவட்ட அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், வங்கிகள், தபால் துறையினர் ஆகியோர் அரங்குகள் அமைத்து அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளனர். ஆதார் திருத்தம் முகாமும் நடைபெற உள்ளது.

மக்கள் நலன் சார்ந்து அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி உள்ள போதும், அதனை முழுமையாக மக்களிடம் கொண்டு சென்று மக்கள் பயனடைய இது போன்ற நிகழ்ச்சிகள் முக்கியமானதாக அமைகிறது. அந்த வகையில் கோவை நகரில் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், தினம்தோறும் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கின்றோம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் இதில் கலந்துகொண்டு பயனடையுள்ளனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. குறிப்பாக, இந்த கண்காட்சியில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்கிற அடிப்படையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான மத்திய அரசின் திட்டங்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

இதேபோல், கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மத்திய மக்கள் தொடர்பக அலுவலகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது' என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில், மத்திய மக்கள் தொடர்பக சென்னை மண்டல அலுவலகத்தின் இயக்குனர் லீலா மீனாக்ஷி, திருச்சி மத்திய மக்கள் தொடர்பக அலுவலகத்தின் கள விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe