ஆட்டிசம் பாதித்த மகனின் சிகிச்சைக்காக பிரியாணி போட்டியில் கலந்து கொண்ட தந்தை- கடைசி நேரத்தில் கண்ணீர்...

published 2 weeks ago

ஆட்டிசம் பாதித்த மகனின் சிகிச்சைக்காக பிரியாணி போட்டியில் கலந்து கொண்ட தந்தை- கடைசி நேரத்தில் கண்ணீர்...

கோவை: கோவை ரயில் நிலையம் அருகே ரயில் பெட்டி போன்ற வடிவமைப்பில் தனியார் உணவகம் ஒன்றில் இன்றைய தினம் பிரியாணி போட்டி நடைபெற்றது. ஆறு பிரியாணி சாப்பிட்டால் 1 லட்சம், நான்கு பிரியாணி சாப்பிட்டால் 50 ஆயிரம், மூன்று பிரியாணி சாப்பிட்டால் 25 ஆயிரம் ரூபாய் என பரிசு அறிவிக்கப்பட்டு போட்டியானது நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கணேச மூர்த்தி என்பவர் கலந்து கொண்டார். இவருடன் பங்கேற்ற போட்டியாளர்கள் இரண்டாவது பிரியாணி சாப்பிடுவதற்கே திணறிய நிலையில் இவர் இரண்டு பிரியாணி சாப்பிட்டு முடித்து மூன்றாவது பிரியாணியை சாப்பிட துவங்கினார். அப்போது இடையில் சிறிது தண்ணீர் அருந்தியதால் வாந்தி எடுத்து போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். 

ஒரு லட்சம் ரூபாய் வாங்கவில்லை என்றாலும் மூன்று பிரியாணி சாப்பிட்டு 25 ஆயிரம் ரூபாய் வாங்கி விட வேண்டும் என்று சாப்பிட முயன்றும் வாந்தி வந்ததால் போட்டியில் இருந்து நீக்கப்பட்டதால் கண் கலங்கினார்.

இது குறித்து கணேச மூர்த்தி கூறுகையில், தனது மகன் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மகனின் மருத்துவ செலவிற்காகவே இந்த போட்டியில் கலந்து கொண்டதாக தெரிவித்தார். கோவையில் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் இந்த போட்டியில் ஜெயிக்கும் பணத்தை மகனின் மருத்துவ செலவிற்காக பயன்படுத்தலாம் என்று நினைத்ததாகவும் கண்ணீர் மல்க கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe