கோவையில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பது தொடர்பான கூட்டம் - ஆட்சியர் அறிவிப்பு

published 2 weeks ago

கோவையில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பது தொடர்பான கூட்டம் - ஆட்சியர் அறிவிப்பு

கோவை: கோவையில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பது தொடர்பான கூட்டம்  நாளை நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுத்து நிறுத்தல் மற்றும் கையாளுதல் தொடர்பான கூட்டம் தமிழக அரசின் தலைமை செயலாளரால் நாளை (திங்கட்கிழமை) காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட உள்ளது.

இந்த கூட்டம் நிர்மலா கல்லூரியில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இதில் கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், கலை மற்றும் அறிவியல், பொறியியல், மேலாண்மை, சட்டம், மருத்துவ கல்லூரி முதல்வர்கள், அனைத்து தனியார் கல்லூரி முதல்வர்கள், மற்றும் அனைத்து துறை தலைவர்களும், தலைமை செயலாளரால் நடத்தப்படும் காணொலி கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe