கோவை பூம்புகார் நிலையத்தில் ரு.1 50 லட்சம் பணம் கொள்ளை; மடக்கியது தனிப்படை!

published 2 weeks ago

கோவை பூம்புகார் நிலையத்தில் ரு.1 50 லட்சம் பணம் கொள்ளை; மடக்கியது தனிப்படை!

கோவை: கோவை டவுன்ஹால் , மணிக்குண்டு பி.பி தெருவில்  பூம்புகார் விற்பனை நிலையமம் செயல்பட்டு வருகிறது. 
இதன் மேலாளராக காந்திமா நகர் ஈடபிள்யுஎஸ் குடியிருப்பில் குடியிருக்கும் ஆனந் பணியாற்றி வருகிறார். 

கடந்த24ஆம் தேதி கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அங்கு கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணம1.50 லட்சம் மாயமாகி இருந்தது. 

இது குறித்து  மேலாளர் ஆனந்தன் உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்த ஆசாமியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சந்தேகத்திற்கு இடமாக சுற்றி2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் பெயர் விஜயராகவன் விருதுநகர், அத் கீம், கொல்கத்தா என தெரியவந்தது. இவர்கள் கோவை அருகே உள்ள நூல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள். 

மதுபோதையில் சம்பவத்தன்று பூம்புகார் கடையை வெட்டிக்கடை என நினைத்து உடைத்து உள்ளே கொண்டு திருடியதாக போலீசில் கூறிவிட்டார்.

போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரே வாரத்தில் துப்பு துலக்கிய தன உக்கடம் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, சப் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், எட்டுக்கள் கில்பர்ட், பாபு ரமேஷ், வடிவேலு, அசோக் குமார் ஆகியோரை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe