திருப்பூரில் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை; கோவைக்கும் தேவை என வலியுறுத்தல்!

published 1 week ago

திருப்பூரில் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை; கோவைக்கும் தேவை என வலியுறுத்தல்!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் போக்கு அதிகரித்திருப்பதை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பாதுகாப்பான பயணம் குறித்து போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

இதுகுறித்து, பல்லடம் போக்குவரத்து போலீசார் கூறியதாவது:

பேருந்துகளில், மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதை ஓட்டுனர், நடத்துனர்கள் எப்போதும் அனுமதிக்கக் கூடாது.

திருப்பூரில் ரூ.25,000 ஊதியம், உணவு, தங்குமிடத்துடன் வேலைவாய்ப்பு https://newsclouds.in/news/8518/employment-in-tirupur-with-rs-25-000-salary-food-and-accommodation-

பேருந்தை அதி வேகமாக இயக்குதல் மற்றும் படிக்கட்டு பயணத்தை அனுமதித்தால், சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர், நடத்துனரின் லைசன்ஸ் மற்றும் பஸ் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். 

கோவையில் சில தனியார் பேருந்து ஓட்டுனர்கள் தாறுமாறாக பேருந்துகளை இயக்கி மக்களை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே விதிகளை மீறி வாகனம் ஓட்டி, மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் செய்வோரை கோவை மாநகர, மாவட்ட போலீசார், வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe