கோவையில் காரில் வந்து குப்பை கொட்டியவருக்கு அபராதம் விதித்தது மாநகராட்சி!

published 1 week ago

கோவையில் காரில் வந்து குப்பை கொட்டியவருக்கு அபராதம் விதித்தது மாநகராட்சி!

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொது இடங்களில் குப்பைகளை கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக பொது இடங்களில் வைக்கப்பட்டு இருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு வீடு, வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித் தனியாக பிரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு வருகிறது. 

பொது இடத்தில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தீவிர ஆய்வும் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் நஞ்சுண்டாபுரம் சாலை ஓரத்தில் ஒருவர் காரில் வந்து குப்பை கொட்டுவதாக சுகாதாரத்துறை ஆய்வாளர் ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு குப்பையை கொட்டிய நபரை கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தினார். அதில் அவர் நேதாஜி நகரை சேர்ந்த அன்பு என்பது தெரிய வந்தது. இதை அடுத்து அவருக்கு ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe