கோவை குற்றாலத்தில் கோலாகலம்... அருவியின் இடையே அலைமோதும் மக்கள் கூட்டம்!

published 1 week ago

கோவை குற்றாலத்தில் கோலாகலம்...  அருவியின் இடையே அலைமோதும் மக்கள் கூட்டம்!

கோவை: விநாயகர் சதுர்த்தி மற்றும் விடுமுறை தினங்களை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கோவை மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தளமாக விளங்குகிறது கோவை குற்றாலம். மேற்குத்தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவியில் குளித்து மகிழவும், இங்குள்ள சூழல் சுற்றுலாவை அனுபவித்து மகிழவும் தினதோறும் உள்ளூர், வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் வந்து செல்கின்றனர்.

இந்த கோவை குற்றாலத்தில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் சுற்றுலாப்பயணிகளுக்கு அவ்வப்போது வனத்துறை தடை விதிக்கிறது.

இதனிடையே கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்தது.

அருவியில் நீர்வரத்து சீரானதை அடுத்து, 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு கோவை மக்களை குஷிப்படுத்திய நிலையில், விநாயகர் சதுர்த்தி மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று கோவை குற்றாலத்தில் மக்கள் குவிந்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் கோவை குற்றால சூழல் சுற்றுலா வந்தனர். குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்த வெள்ளத்தில் குழந்தைகளோடு பெரியவர்களும் குளித்து மகிழ்ந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe