ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய உடை அணிந்து வந்த வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் வழங்கிய உணவகம்...

published 5 months ago

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய உடை அணிந்து வந்த வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் வழங்கிய உணவகம்...

கோவை: கோவை ரயில் நிலையம் வளாகத்தில் பாபி குரூப் நிறுவனத்தின் சார்பில் போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் பெட்டி உணவகத்தில் ஓணம் திருநாளான இன்று ஓணம் சத்யா என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் புக்கிங் செய்த 200 நபர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஓணம் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டது.இந்த ஓணம் சத்யா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் 200 நபர்களில் யார் ஓணம் பண்டிகையை விவரிக்கும் வகையில் பாரம்பரிய உடை அணிந்து பார்வையாளர்களை கவரும் வகையில் வருபவர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என்று உணவகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பார்வையாளர்களை கவரும் விதமாக பாரம்பரிய உடை அணிந்து வந்த கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த டினோ எஸ்டர் குடும்பத்தினருக்கு முதல் பரிசாக 4 கிராம் தங்க நாணயமும்,கோவையை சேர்ந்த வினித் அனிதா தம்பதியினருக்கு இரண்டாவது பரிசாக 2 கிராம் தங்க நாணயமும் மற்றும் மூன்றாவது பரிசாக இந்த நிகழ்வு குறித்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு அதிக பார்வையாளர்களை ஈர்த்த 
பாதுஷா-க்கு ஒரு கிராம் தங்க நாணயங்களை நிர்வாக பங்குதாரர் டாக்டர் ஷயின் வழங்கினார் உடன் உணவகத்தின் மேலாளர் ஜோசப் இருந்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe